On this page
Student Scholarship
Reading To Discover My Cultural Identity
Tamil Literary Garden, Canada invites studetnts to submit an essay on the topitc “Reading To Discover My Cultural Identity.” The winner will be awarded a scholarship of $1,000 CAD.
In an age shaped by social media and artificial intelligence, young people have access to more information than ever before. Yet algorithms often recommend content based on popularity and browsing history, creating echo chambers and short attention spans. Reading books, literature, and history offers a more thoughtful way to understand one’s language, values, heritage, and cultural identity. This essay invites students to explore how reading can help them think independently, evaluate information critically, and strengthen their connection to Tamil language, culture, and heritage while navigating an increasingly AI-driven and digitally connected world.
Essays can be written in Tamil or English.
Scholarship: $1,000 CADEligibility: 15-19 yearsEssay Size: 800 to 1000 wordsDeadline: 10 Sep 2026
Email your essay along with a resume to
வாசிப்பின் மூலம் எனது பண்பாட்டு அடையாளத்தைக் கண்டறிதல்
கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் வருடாந்திர உதவித் தொகையைப் பெற “வாசிப்பின் மூலம் எனது பண்பாட்டு அடையாளத்தைக் கண்டறிதல்” என்ற தலைப்பில் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க மாணவர்களை அன்புடன் அழைக்கிறது.
சமூக ஊடகங்களாலும் செயற்கை நுண்ணறிவாலும் (AI) கட்டமைக்கப்படும் இன்றைய காலத்தில், இளைஞர்கள் முன்னெப்போதும் சாத்தியமில்லாத, அளவிற்கு அதிகமான, தகவல்களை மிக எளிதாகப் பெறக்கூடிய நிலையில் உள்ளனர். இருப்பினும், சமூக ஊடகங்களின் கணக்கீடுகள் பெரும்பாலும் ஏற்கனவே பிரபலமானவை மற்றும் நாம் கடந்தகாலத்தில் தேடிய அல்லது பார்வையிட்ட தகவல்களின் அடிப்படையில் மாத்திரமே புதியனவற்றை நமக்குப் பரிந்துரைக்கின்றன. இதனால், ஒரே மாதிரியான கருத்துக்கள் மட்டுமே தொடர்ந்து நம்மை வந்தடையும் ‘தகவல் குகைகளுக்குள்’ (echo chambers) சிறைப்படுகிறோம். தொடர்ச்சியாக நம்மை நோக்கி ஏவப்படும் தகவல் பெருக்கால் கவனத்தை நீண்ட நேரத்திற்கு ஒரே விடயத்தில் தக்கவைத்து ஆழக் கற்கும் திறன் சாத்தியமற்றுப் போகிறது.
மாறாக, புத்தகங்கள், இலக்கியங்கள் மற்றும் வரலாற்றைப் படிப்பது, ஒருவரின் மொழி, விழுமியங்கள், பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு அடையாளங்களைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான, மிகவும் ஆழமான மற்றும் சிந்தனைமிக்க வழிகளை வழங்குகிறது. புத்தக வாசிப்பு, சுயமாகச் சிந்திக்கவும், கிடைக்கும் தகவல்களை விமர்சன ரீதியாக மதிப்பீடு செய்யவும் கற்றுக் கொடுக்கிறது.
உங்கள் கட்டுரையில் புத்தக வாசிப்பு எவ்வாறு உங்கள் சுய சிந்தனையை வளர்க்கிறது, தகவல்களை விமர்சன ரீதியாக ஆராய்ந்து உங்களுக்கேயான மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்ளப் பயிற்றுவிக்கிறது என விளக்குங்கள். பெருகிவரும் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொடர்புகளால் இணைக்கப்பட்டுள்ள உலகில் புத்தக வாசிப்பு வாயிலாக, தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பாரம்பரியத்துடனான தொடர்புகளை இளம் தலைமுறையினர் எப்படி அடையாளம் காண, வலுப்படுத்திக்கொள்ள முடியும் எனவும் விவரியுங்கள்.
கட்டுரைகளைத் தமிழிலோ ஆங்கிலத்திலோ எழுதலாம்.
உதவித்தொகை: $1,000 CADதகுதி: 15–19 வயதுகட்டுரையின் நீளம்: 800 முதல் 1,000 சொற்கள்கட்டுரைகளைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 10 செப்டம்பர் 2026
உங்கள் கட்டுரையுடன் சுயவிவரக் குறிப்பையும் (Resume) இணைத்து கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்: